சிலையின் தரம் பற்றி கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள்
சிலையின் தரம் பற்றி கேள்வி எழுப்பும் எதிர்கட்சிகள் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், மகாராஜா சத்ரபதி சிவாஜிக்கு 35 அடி உயர சிலை நிறுவப்பட்டது. சிலையை கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். சத்ரபதி சிவாஜி சிலையின் தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தனியாக கழன்று கீழே விழுந்து நொறுங்கியது. சிந்துதுர்கில் சில தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் அதன் காரணமாக சிலை உடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஜா சத்ரபதி சிவாஜியை நாங்கள் கடவுளாக வணங்குகிறோம். kலத்த காற்றில் சிலை இடிந்து விழுந்தது துரதிஷ்டமானது என்றார். சிலையின் தரத்தை பற்றி கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் மகாராஷ்ரா அசை விமர்சிக்க தொடங்கி உள்ளனர். சிலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கேள்வி எழுப்பினார். அதே கட்சி எம்எல்ஏ வைபவ் நாயக், தரமற்ற வேலையால் சிலை உடைந்ததாக கூறினார். தரம், முறையான பராமரிப்பு இல்லாததால் சிலை உடைத்துள்ளது. இதற்கு அரசுதான் பொறுப்பு என என்சிபி கட்சி முன்னாள் அமைச்சர் ஜெயந்தி பாட்டீல் கூறினார். சத்ரபதி சிவாஜி சிலை அதே இடத்தில் மீண்டும் அமைக்கப்படும் என்று பொதுப்பணி அமைச்சர் ரவீந்திர சவான் கூறினார்.