உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராஜ்ய சபாவில் பாஜ பலம் உயர்வைக் கண்டது Rajya Sabha bypolls bJP won 9 seats

ராஜ்ய சபாவில் பாஜ பலம் உயர்வைக் கண்டது Rajya Sabha bypolls bJP won 9 seats

ராஜ்ய சபாவில் பாஜ பலம் உயர்வைக் கண்டது Rajya Sabha bypolls bJP won 9 seats Elected Unopposed NDA congress Majority Mark பியூஷ் கோயல், ஜோதிராதித்ய சிந்தியா, சர்பானந்தா சோனோவால் மற்றும் லாலு மகள் மிசா பார்தி உள்ளிட்ட 10 பேர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதால் ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதுதவிர மேலும் 2 ராஜ்ய சபா பேரும் ராஜினாமா செய்தனர். காலியான 12 ராஜ்ய சபா சீட்களுக்கும் செப்டம்பர் 3ம்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மகாராஷ்ட்ரா, பீகார், அசாமில் தலா 2 சீட்,, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், அரியானா, ஒடிசா, திரிபுரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா 1 சீட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தெலங்கானா தவிர மற்ற மாநிலங்களில் பாஜ கூட்டணி ஆட்சியில் உள்ளது. இதனால் பாஜ கூட்டணி எளிதில் வெற்றி பெறும் என்பதால் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. அதேபோல, தெலங்கானாவில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால், அறிவிக்கப்பட்ட 12 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ோட்டியின்றி தேர்வானவர்கள் விவரம் வருமாறு: ராஜஸ்தானில் இருந்து பாஜ சார்பில்போட்டியிட்ட மத்திய அமைச்சர் ரன்வீத் சிங் பிட்டு, மத்தியப்பிரதேசத்தில் இருந்து பாஜ சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பீகாரில் இருந்து ராஷ்டிரிய லோக் மோர்ச்சா வேட்பாளர் உபேந்திர குஷ்வாஹா, பாஜ வேட்பாளர் வழக்கறிஞர் மனம் குமார் மிஸ்ரா தேர்வாயினர். குஷ்வாஹா கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஹரியானாவில் இருந்து பாஜ வேட்பாளர் கிரண் சவுத்ரியும், அசாமில் இருந்து பாஜ வேட்பாளர்கள் ராமேஷ்வர் தெலி, மிஷன் ரஞ்சன் தாஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். மகாராஷ்ட்ராவில் இருந்து அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் நிதின் பாட்டில், பாஜ வேட்பாளர் தைர்யஷீல் பாட்டில் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒடிசாவில் இருந்து பாஜ வேட்பாளர் மம்தா மொகந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் அபி ேஷக் மானு சிங்வி, திரிபுராவில் இருந்து பாஜ வேட்பாளர் ராஜீவ் பட்டாச்சார்ஜீ ஆகியாரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பாஜவுக்கு 9 இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது. அதன் கூட்டணி கட்சிகளுக்கு 2 இடங்கள் கிடைத்தது. காங்கிரஸ் ஒரு இடத்தை பிடித்தது. இதன்மூலம் ராஜ்ய சபாவில் பாஜவின் பலம் 96 ஆக உயர்ந்தது தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 112 ஆனது. காங்கிரசின் ஒரு சீட்டையும் சேர்த்து எதிர்கட்சிகளின் பலம் 85 ஆக உள்ளது. 245 எம்பிக்களை கொண்ட ராஜ்ய சபாவில் 8 சீட் காலியாக உள்ளது. தற்போது 237 எம்பிக்கள் உள்ளனர். மெஜாரிட்டியை எட்டிப்பிடிக்க 119 எம்பிக்கள் தேவை

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை