உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய, மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மத்திய, மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு நிதியை கொடுக்காமல் புதிய கல்வி கொள்கை திட்டத்தை ஏற்க மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. மும்மொழி கொள்கை திட்டத்தை ஒரு போதும் தமிழக அரசு ஏற்காது. நிதி சுமையை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய மத்திய அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் நிதி தருவதாக சொல்வது ஏற்க கூடியது இல்லை.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ