உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்லீப்பர் செல்களை ஒடுக்க போலீஸ், என்ஐஏ கைகோர்ப்பு | NIA | NIA Investigation | TN Police

ஸ்லீப்பர் செல்களை ஒடுக்க போலீஸ், என்ஐஏ கைகோர்ப்பு | NIA | NIA Investigation | TN Police

ஸ்லீப்பர் செல்களை ஒடுக்க போலீஸ், என்ஐஏ கைகோர்ப்பு | NIA | NIA Investigation | TN Police தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் மத மாற்றத்தை தடுத்த பாஜ மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளான சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலுார் வெள்ளையப்பன், சென்னை அம்பத்துார் சுரேஷ்குமார், தஞ்சாவூர் ராமலிங்கம், கோவை சசிகுமார் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் கடலுாரை சேர்ந்த காஜாமொய்தீன் தலைமையில் ஐஎஸ் பயங்கரவாத ஆதரவு அமைப்பு செயல்பட்டது தெரியவந்தது. கொலைகள் தொடர்பாக போலீஸ் பக்ருதீன், பன்னா இன்ஸ்மாயில், பிலால் மாலிக் உள்ளிட்டோர் கைதாகினர். ஆனால் மீண்டும் காஜாமொய்தீன் கூட்டாளிகள் தொடர்ந்து சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர். அவர்கள் தான் கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் குண்டு வெடிப்பை நடத்தினர். இலங்கையில் ஈஸ்டர் நாளில் குண்டு வெடிப்பு, பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு நாட்டை உலுக்கியது. இந்த பயங்கரவாதிகளுக்கும் தமிழகத்தில் காஜாமொய்தீன் கூட்டாளிகள் தான் அடைக்கலம் கொடுத்துள்ளனர். இவர்கள் அல்குவைதா, இந்தியன் முஜாகிதீன் உள்ளிட்ட வெவ்வேறு பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. புற்றீசல்கள் போல அதிகரித்து வரும் இக்குழுக்களை கட்டுப்படுத்த, உள்ளூர் போலீசாருடன் இணைந்து என்ஐஏ பணியாற்றி வருகிறது. இதற்கான செயல் திட்டங்களை, சில தினங்களுக்கு முன் தமிழகம் வந்த என்ஐஏ தென் மண்டல இயக்குனர் சந்தோஷ் ரஸ்தோகி வகுத்து தந்துள்ளார்.

செப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி