உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டணிக்கு நெருங்கி வந்து ஆம் ஆத்மி விலகியது ஏன் AAP | Congress | Alliance| Haryana

கூட்டணிக்கு நெருங்கி வந்து ஆம் ஆத்மி விலகியது ஏன் AAP | Congress | Alliance| Haryana

90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ல் தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜவுக்கும் காங்கிரசுக்கும் வலுவான போட்டி நிலவுகிறது. 2019 லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் பாஜ வென்றது. 2024 தேர்தலில் 5 மட்டுமே பாஜவுக்கு வசமானது. எஞ்சிய 5 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. ஆளும் கட்சியாக இருந்தாலும் பாஜவின் பலம் குறைந்துவிட்டதாக நினைக்கிறது காங்கிரஸ். ஆனால் கருத்துக்கணிப்புகள் பாஜவுக்கு சாதகமாகவே உள்ளன. கூட்டணியை பலப்படுத்தி போட்டியிட்டால் ஆட்சியை கைப்பற்றலாம் என கருதுகிறது காங்கிரஸ். ஆம் ஆத்மியுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வது பற்றி ராகுல் ஆலோசனை நடத்தினார். கூட்டணிக்கு ஓகே சொன்ன ஆம் ஆத்மி, 10 தொகுதிகளை கேட்டது. 5 மட்டும் கொடுக்க காங்கிரஸ் முன்வந்தது. ஆம் ஆத்மி அதை ஏற்கவில்லை.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை