உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோடியின் பதிலை கேட்டு நெகிழ்ந்த ஒபாமா: மனம் திறந்த இந்திய தூதர்! PM Modi | Obama | vinay kwathra

மோடியின் பதிலை கேட்டு நெகிழ்ந்த ஒபாமா: மனம் திறந்த இந்திய தூதர்! PM Modi | Obama | vinay kwathra

மோடியின் பதிலை கேட்டு நெகிழ்ந்த ஒபாமா: மனம் திறந்த இந்திய தூதர்! PM Modi | Obama | vinay kwathra பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடக்கும் குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அமெரிக்கா சென்ற மோடிக்கு, அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்வர் மாகாணத்தின் வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் பைடன் நீண்ட நாட்களாக வசித்து வரும் இல்லத்தில் அவரை சந்தித்து பேசினார். மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு 2014ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அப்போதையை அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார். அப்போது மோடிக்கு, மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் மோகன் குவாத்ரா. வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வந்த இவர், இப்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக உள்ளார். அந்த சமயத்தில் பிரதமர் மோடிக்கும், ஒபாமாவுக்கும் நடந்த நட்பு ரீதியிலான சுவாரஸ்ய உரையாடல் ஒன்றை வினய் குவாத்ரா தற்போது வெளியிட்டு உள்ளார். 2014ம் ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, ஒபாமாவுடன் சேர்ந்து மார்ட்டின் லூதர் கிங் நினைவிடத்துக்கு சென்றார். ஒபாமாவின் ஸ்டிரெட் லிமோசின் காரில் இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். இந்த உரையாடல் குடும்பத்தை பற்றியும் திரும்பியது. மோடியின் தாய் குறித்து ஒபாமா கேட்டறிந்தார். புன்னகையுடன் வெளிப்படையாகவும், எதிர்பாராத வகையிலும் மோடி பதிலளித்தார். நான் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏறக்குறைய உங்களது இந்த காரின் அளவு கொண்ட வீட்டில் தான் எனது தாய் வசிக்கிறார் என மோடி கூறினார். அவரது இந்த பதிலைக் கேட்டு ஒபாமா மிகவும் ஆச்சரியம் அடைந்தார். மோடியின் வெளிப்படையான பதில் அவருக்கு மிகவும் பிடித்து போனது. இந்த உரையாடல் இரு தலைவர்களுக்கும் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் இருவரும் அடிமட்ட நிலையில் இருந்து தங்கள் நாடுகளின் மிக உயர்ந்த பதவிகளுக்கு வந்தவர்கள் என வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !