பிரிவதாக சொன்ன நிலையில் புகார் ஏன்? actor jayamravi | aarti
நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியை விவாரத்து செய்யவதாகவும், இருவரும் பிரியபோவதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால், ரவியின் முடிவு தன்னிச்சையானது என ஆர்த்தி சொன்னார். இது என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் அவர் முடிவெடுத்து இருப்பதாக கூறினார். பாடகி ஒருவருடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக மனைவியை அவர் பிரிய இருப்பதாக தகவல் பரவியது. அதை மறுத்த ஜெயம்ரவி, இந்த விஷயத்தில் யாரையும் இழுக்க வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்கள் எனக்கூறி இருந்தார். இந்நிலையில் மனைவி ஆர்த்தி மீது சென்னை அடையாறு காவல் நிலையத்தில் ஜெயம்ரவி புகார் அளித்துள்ளார்.
செப் 24, 2024