திருப்பூரில் பதுங்கிய வங்கதேச ஜோடி சிக்கியது bangladesh husband and wife arrested
திருப்பூரில் பதுங்கிய வங்கதேச ஜோடி சிக்கியது bangladesh husband and wife arrested tiruppur police crime illegal employment Tirupur Banian companies திருப்பூரில் விசா இல்லாமல் வசிக்கும் வங்கதேச நாட்டவர் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நடக்கிறது. மேற்குவங்கம் வழியாக ஊடுருவி, திருப்பூருக்கு வரும் அவர்கள் புரோக்கர்கள் மூலம் பனியன் தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்கின்றனர். பிறகு, வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதியில் ஐக்கியமாகி விடுகின்றனர். இதனால் வடமாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களின் பின்னணியை ஆராய்ந்தபிறகே, பல நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கின்றன. சில நிறுவனங்கள் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. திருப்பூர் பஸ் நிலையம் அருகே சுற்றித்திரிந்த வங்கதேச இளைஞர்கள் 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருப்பூர் அருகே சட்டவிரோதமாக தங்கி பனியன் தொழிற்சாலையில் வேலை பார்ப்பது தெரிந்தது. இதை தொடர்ந்து திருப்பூர் நகரில் வட மாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வங்கதேச இளைஞர்கள் பதுங்கி இருக்கிறார்களா? என போலீசார் சோதனை நடத்தினர். வெங்கமேடு பகுதியில் சோதனை செய்தபோது, தன்வீர் அகமது(29), அவர் மனைவி சோஹாசிம் (22) ஆகியோர் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். தாங்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என கூறினர். ஆனால், அவர்களிடம் திருப்பூர் முகவரியில் வசிப்பதற்கான ஆதார் அட்டை இருந்தது. போலீசின் சந்தேகம் வலுத்தது. ஆதார் கார்டை ஆராய்ந்தபோது அது போலி என தெரிய வந்தது. கணவன் மனைவியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீசார் துருவித்துருவி விசாரித்தனர். இருவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது உறுதியானது.