பதவியில் இருந்து விலகிய நாதக மாவட்ட செயலர் | NTK | Seeman | Villupuram
நாதகவின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் பதவியில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது; நாம் தமிழர் கட்சியில் 9 ஆண்டுகளாக பணி செய்தேன். உடல் உழைப்பு மற்றும் பண விரயம் இவை எவையும் பொருட்படுத்தும் படி ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லை. பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இது குறித்து அண்ணன் சீமான் கூறுகையில், இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது. நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது. என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்கிறார். பலமுறை பேசியும், நான் செய்வது தான் செய்வேன் நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் என்று கூறுகிறார்.