தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தாயார் பாஜவுக்கு ஆதரவு haryana election| Bjp| independent mlas back bjp
தொழிலதிபர் நவீன் ஜிண்டால் தாயார் பாஜவுக்கு ஆதரவு haryana election| Bjp| independent mlas back bjp ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜ, தொடர்ந்து 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஹரியானா சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 90. இதில், பாஜ 48 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரசுக்கு 37 பேர் உள்ளனர். இந்திய தேசிய லோக்தள கட்சி 2 இடங்களில் வென்றது. எஞ்சிய 3 பேர் சுயேச்சைகள். சுயேச்சையாக வெற்றிபெற்ற 3 பேரும் இப்போது பாஜவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவர்களில் ராஜேஷ் ஜூன், தேவேந்திர காத்யான்(Rajesh Joon, Devender Kadyan) ஆகியோர் பாஜவில் சேர்ந்து விட்டனர். இதனால், அக்கட்சியின் பலம் 50 ஆக உயர்ந்துள்ளது. ராஜேஷ் ஜூன், பகதூர்கர் தொகுதியில், 41,999 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் தினேஷ் கவுசிக்கை தோற்கடித்தவர். தேவேந்திர காத்யன், கானூர் தொகுதியில் காங்கிரஸின் குல்தீப் சர்மாவை 35,209 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றவர். மற்றொரு சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டாலும் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இவர், தொழிலதிபரும், ஹரியானாவின் குருஷேத்ரா லோக்சபா தொகுதி பாஜ எம்பியுமான நவீன் ஜிண்டாலின் தாயார். சாவித்ரி ஜிண்டால், ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசின் ராம் நிவாஸ் ராராவை 18,941 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.