உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கர்நாடக ஆலைகளால் தமிழக நீர் வளம் பாதிப்பு Hosur Kelavarapalle dam| Thenpennai river

கர்நாடக ஆலைகளால் தமிழக நீர் வளம் பாதிப்பு Hosur Kelavarapalle dam| Thenpennai river

கர்நாடக ஆலைகளால் தமிழக நீர் வளம் பாதிப்பு Hosur Kelavarapalle dam| Thenpennai river| Bengaluru factory waste கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. கர்நாடகாவின் நந்திமலையில் உருவாகும் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்ததால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 1,206 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர் வரத்து 1, 419 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் மழை ஓயாததால் நீர் வரத்து தொடரும் என்பதால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 1,433 கன அடி நீர், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணா பாயும் கிருஷ்ணகிரி, தருமபுரி கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரில், ஆலைக் கழிவுகள் கலந்து நுரை மிதப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சட்ட விரோதமான முறையில் தென்பெண்ணை ஆற்றில் விடப்படுகிறது. இதனால், கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரே மாசடைந்த நிலையில் தான் தமிழகத்திற்கு வந்து சேருகிறது. தற்போது அணையில் இருந்து ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் முழுதும் ஆலைக்கழிவுகளால் நுரை பொங்கிய நிலையில் ஓடுவதால் கரையோர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடும் துர்நாற்றம் வீசும் இந்த நீரைத்தான் பாசனத்திற்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கூறுகினறனர்.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி