விசிகவை தொடர்ந்து காங்கிரசும் திமுகவுக்கு நெருக்கடி mk stalin| dmk| congress
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் சரவணன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதன் விபரம்; தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி இருக்கிறார். எனவே, தாங்கள் இப்போதே நமது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் அவையில் இடம் அளிக்க வேண்டும். திமுக தொடங்கப்பட்ட காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில்தான் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது. இதைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, தமிழக மக்களின் எண்ணத்தை நிறைவேற்றி, தமிழகத்திற்கு முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று சரவணன் கேட்டுக்கொண்டு உள்ளார். நேற்று நடந்த தவெக மாநாட்டில் பேசிய விஜய், தங்களுடன் கூட்டணிக்கு வருவோரை அரவணைத்து ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகார பகிர்வு செய்யப்படும் என கூறியிருந்தார்.