உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டாக்டரை ஓட ஓட விரட்டி அடித்த கும்பல் Doctor assault | 10 persons | Trichy

டாக்டரை ஓட ஓட விரட்டி அடித்த கும்பல் Doctor assault | 10 persons | Trichy

டாக்டரை ஓட ஓட விரட்டி அடித்த கும்பல் Doctor assault | 10 persons | Trichy திருச்சி, பெரிய மிளகு பாறை இஎஸ்ஐ மருத்துவமனையில், தீரன் நகரை சேர்ந்த எலும்பு முறிவு டாக்டர் முத்து கார்த்திகேயன் பணியாற்றி வருகிறார். இன்று மருத்துவமனைக்குள் கார்த்திகேயன் காரை பார்க்கிங் செய்யும் போது, அங்கு ஏற்கனவே காரை நிறுத்த வந்தவர்களுக்கும் டாக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க டாக்டர் கார்த்திகேயன் மருத்துவமனைக்குள் ஓடினார். விரட்டி சென்ற அந்த கும்பல், மருத்துவமனைக்குள் புகுந்து டாக்டரை சரமாரியாக தாக்கியது. இதில் டாக்டர் காயமடைந்தார். அவரின் காது கிழிந்தது. மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த கும்பலை தடுத்து நிறுத்தி டாக்டரை மீட்டனர். சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மருத்துவரை தாக்கிய கும்பல் திருச்சி கருமண்டபத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. இந்த கொலை வெறி தாக்குதலுக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ