ஹெஸ்புலாவை வேட்டையாடும் இஸ்ரேல் போர் விமானங்கள் | Israel vs Hezbolla | Israel vs Iran | IDF video
ஹெஸ்புலாவை வேட்டையாடும் இஸ்ரேல் போர் விமானங்கள் | Israel vs Hezbolla | Israel vs Iran | IDF video ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹெஸ்புலா பயங்கரவாதிகளை எதிர்த்து 2 மாதம் முன்பு இஸ்ரேல் போரை துவங்கியது. ஹெஸ்புலாவின் ராணுவ முகாம்கள், பதுங்கு குழிகளை குறி வைத்து தெற்கு லெபனான் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தொடர்ந்து இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் படை தரை வழி தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகள் தீவிரமாக நடந்தாலும், இன்னொரு பக்கம் போரும் தீவிரம் அடைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தரை வழி தாக்குதலின் அடுத்த கட்டத்துக்கு இஸ்ரேல் நகர்ந்தது. அப்போது தெற்கு லெபனான் கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுடன் இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். 6 இஸ்ரேலிய வீரர்களை ஹெஸ்புலா சுட்டுக்கொன்றது. பதிலடியில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டடனர். மறுநாள் இதே மாதிரி இன்னொரு இடத்தில் நடந்த நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டையில் வீரர்களை வழி நடத்திய இஸ்ரேலின் முக்கிய தளபதிகளில் ஒருவர் கொல்லப்பட்டார். பதிலடியில் 5 பயங்கரவாதிகளை இஸ்ரேல் ராணுவம் கொன்றது. அடுத்தடுத்து இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டது அந்த நாட்டுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதனால் ஹெஸ்புலாவுக்கு எதிரான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தியது இஸ்ரேல். கடைசி 3 நாட்களாக பெய்ரூட்டில் போர் விமானங்களை அனுப்பி சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகிறது இஸ்ரேல். நேற்று தெற்கு பெய்ரூட்டில் இஸ்ரேல் போர் விமானங்கள் அடுத்தடுத்து 4 ரவுண்ட் தாக்குதல் நடத்தின. குடியிருப்பு பகுதிகளில் இருந்த கட்டடங்கள் பொளபொளவென சரிந்து விழுந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று காலையில் இஸ்ரேல் போர் விமானங்கள் மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தன. தெற்கு பெய்ரூட் நகரில் குடியிருப்புகளுக்கு இடையே இருந்த ஹெஸ்புலாவின் பதுங்கிடம், ஆயுத மையம், இதர அலுவலகங்களை குறி வைத்து குண்டு வீசின. மதியம் வரை 5 முறை இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசின. இதில் ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகின. 3 நாட்களாக துல்லிய தாக்குதல் நடத்தி ஹெஸ்புலாவை நிலை குலைய செய்து இருக்கிறோம். குடியிருப்புகளுக்கு இடையே மக்களை கேடயமாக பயன்படுத்தி ஹெஸ்புலா பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கின்றனர். அப்பாவி மக்கள் இறப்பதை தவிர்க்க, அவர்கள் வெளியேறும் படி எச்சரிக்கை விடுத்து விட்டு பின்னர் தான் தாக்குதல் நடத்தினோம் என்று இஸ்ரேல் கூறி உள்ளது. 2 மாதங்களுக்கு மேலாக நடக்கும் ஹெஸ்புலாவுக்கு எதிரான போரில் லெபனானில் இதுவரை 2500 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறி உள்ளது.