உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தை தாக்க வருது புயல்? பரபரப்பு அப்டேட் cyclone fengal | TN weather update | rain today | IMD

தமிழகத்தை தாக்க வருது புயல்? பரபரப்பு அப்டேட் cyclone fengal | TN weather update | rain today | IMD

நாளை வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கூறியது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இப்போது ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இன்னொரு புறம், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 24ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். 25ம் தேதி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். 26ம் தேதி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் மிககனமழை கொட்டித்தீர்க்கும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ