உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மிரட்ட வரும் பெங்கல் புயல் உருவாவது எப்போது? | Cyclone Fengal Alert | Heavy rain | School Leave | IM

மிரட்ட வரும் பெங்கல் புயல் உருவாவது எப்போது? | Cyclone Fengal Alert | Heavy rain | School Leave | IM

மிரட்ட வரும் பெங்கல் புயல் உருவாவது எப்போது? | Cyclone Fengal Alert | Heavy rain | School Leave | IMD திருச்செந்துாரில் கோயில் யானை தாக்கி இருவர் இறப்பு , குன்றக்குடி கோயில் யானை தீவிபத்தில் இறப்பு போன்ற சம்பவங்கள் மாநிலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் கோயில்கள், மடங்களில் உள்ள யானைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க, தமிழக சுற்றுச்சூழல், வனத்துறை சார்பில் அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதை பின்பற்றி அறநிலையத்துறை சார்பில் 39 விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. யானைகளை உறுதியான மண் அல்லது புல்தரையில் நிறுத்தி வைக்க வேண்டும். இயற்கையான வெளிச்சம், காற்றோட்டத்துடன் கான்கிரீட் கொட்டகை அமைக்க வேண்டும் யானையின் கால், நகக்கண், தந்தங்களில் தோக்கா மல்லி எண்ணெய் விட்டு பராமரிக்க வேண்டும். யானையின் எடை, வயதுக்கு ஏற்ப உணவுகளை உள்ளூர் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் வழங்க வேண்டும் மது அருந்தியவரை யானையின் அருகில் செல்ல அனுமதிக்க கூடாது யானைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உணவு அல்லது பண தேவைக்காக யானையை வெளியே அழைத்து செல்லக்கூடாது வாரத்திற்கு நான்கு முறையும், கோடை காலத்தில் தினமும் குளிப்பாட்ட வேண்டும். சாதாரண யானையின் உடல் எடையில் 5 சதவீத எடையளவு உணவு வழங்க வேண்டும். பாகன்கள் கூடுமானவரை அங்குசத்தை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் திருவிழா, சாமி புறப்பாடு நாட்களில், யானையை கொண்டு செல்லும் போது மக்களிடம் காசு பெறுவதையோ, ஆசிர்வாதம் செய்வதையோ அனுமதிக்கக் கூடாது. தினமும் 10 கி.மீ. துாரத்திற்கு நடைபயிற்சி அளிக்க வேண்டும் யானைகளை பராமரிப்பதற்கு வனத்துறையிடமிருந்து சான்றிதழ் பெற வேண்டும். அதை ஐந்தாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் போன்ற முக்கிய விதிமுறைகள் வழங்கப்பட்டு உள்ளது.

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ