உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பதில் சொல்ல முடியாமல் ஓடிய எம்எல்ஏக்கள் | Rain | Villupuram

பதில் சொல்ல முடியாமல் ஓடிய எம்எல்ஏக்கள் | Rain | Villupuram

விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே உள்ள முத்தியால்பேட்டை, அயினம்பாளையம், கொய்யாதோப்பு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இங்குள்ள மக்கள் குடிநீர், உணவு இல்லாமல் 4 நாட்களாக தவித்து வருகின்றனர். அதிகாரிகள், எம்எல்ஏ, அமைச்சர்கள் என யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் விழுப்புரம் - செஞ்சி நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ அன்னியூர் சிவா வந்தால் தான் எழுந்து செல்வோம் என தெரிவித்தனர். அங்கு வந்த எம்எல்ஏ சிவாவிடம் மக்கள் சராமாரியாக கேள்வி எழுப்பினர். தேர்தல் வந்தால் தெருவுக்கு தெரு ஆள் வைத்து வேலை பார்க்குறீங்க. இப்போ எங்க போனீங்க என கேட்டனர். பதில் சொல்ல முடியாமல் திணறிய எம்எல்ஏ சிவா தலையிலேயே அடித்து கொண்டு கூட்டத்தில் இருந்தவர்களை தள்ளிவிட்டு வெளியேறினார்.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை