உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மழையின் ஆட்டம் ஆரம்பம்! சென்னை நிலை எப்படி? | Rain | Heavy Rain | Rain Alert | IMD

மழையின் ஆட்டம் ஆரம்பம்! சென்னை நிலை எப்படி? | Rain | Heavy Rain | Rain Alert | IMD

மழையின் ஆட்டம் ஆரம்பம்! சென்னை நிலை எப்படி? | Rain | Heavy Rain | Rain Alert | IMD வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் முழுதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 18 செ.மீ, தலைஞாயிறு 14 செ.மீ, வேளாங்கண்ணியில் 13 செ.மீ, மதுராந்தகம் சென்னை கொளத்தூரில் 11 செ.மீ மழை பொழிவு பதிவாகி உள்ளது. சென்னையில் விடிய விடிய தொடரும் மழையால் நீர் ஆதாரங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. சென்னைக்கு குடி நீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 34 அடியை எட்டி உள்ளது. திருவள்ளூரில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் ஏரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கிறது. நீர்வரத்து வினாடிக்கு 1290 கன அடியாக உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி.கன அடியில் நீர் இருப்பு 2,831 மி.கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டி உள்ளது. உபரி நீர் திறப்பு குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். தாழ்வான இடங்களில் நீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தரையிறங்க வரும் விமானங்கள் வானில் வட்டமடித்து 20 நிமிடம் வரை தாமதமாக தரையிறங்குகின்றன. சுமார் 15 விமானங்கள் வரை புறப்படும் நேரம் தாமதமாகி உள்ளது. இது தவிர சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்வரத்துக்கு ஏற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என வருவாய் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 119 அடி கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.50 அடியை எட்டி உள்ளது. அணைக்கு 2,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நீர் வெளியேற்றம் 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. உபரி நீர் திறப்பால் தென்பெண்ணை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை