உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை ஏர்போர்ட்டில் விமானம் எமர்ஜென்சி லேண்டிங் heavy rains|affects|flight services|chennai|

சென்னை ஏர்போர்ட்டில் விமானம் எமர்ஜென்சி லேண்டிங் heavy rains|affects|flight services|chennai|

சென்னை ஏர்போர்ட்டில் விமானம் எமர்ஜென்சி லேண்டிங் heavy rains|affects|flight services|chennai| தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்கிறது. கனமழை காரணமாக சென்னை ஏர்போர்ட்டில் விமானங்களின் வருகையிலும், புறப்பாட்டிலும் கால தாமதம் ஏற்படுகிறது. ஏர்போர்ட்டுக்கு வரும் விமானங்களை தரையிறங்க சுமார் 20 நிமிடங்கள் வரை கால தாமதம் ஏற்படுகிறது. சுமார் 15 விமானங்களுக்கு புறப்படுவதிலும் கால தாதமம் ஏற்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். ஏர் இந்தியாவின் 6 விமான புறப்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எந்திர கோளாறு காரணமாக ஒரு விமானம் சுமார் 2 மணி நேரம் கால தாமதமாக புறப்பட்டது. இன்னொரு விமானம் நடுவானில் பறந்த பிறகு, மோசமான வானிலைகாரணமாக, மீண்டும் சென்னை ஏர்போர்ட்டிலேயே அவசரமாக தரை இறக்கப்பட்டது. சென்னை-மும்பை இண்டிகோ விமானம் இன்று அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டது. அதில் 160 பயணிகள், 8 விமான பணியாளர்கள் இருந்தனர். விமானம் ரன் வேயில், ஓடத் தொடங்கியதும் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்த விமானி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். பொறியாளர்கள் வந்து கோளாறை சரி செய்தபின் காலை 7.45க்கு, 2 மணி நேரம் தாமதமாக விமானம் மும்பை புறப்பட்டது. இன்று காலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து கொச்சி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம் 84 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் என, மொத்தம் 90 பேருடன் புறப்பட்டது. நடுவானில் பறந்தபோது எந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அங்கிருந்து வந்த உத்தரவின்பேரில் விமானம் மீண்டும் சென்னை ஏர்போர்ட்டில் காலை 7.15க்கு தரையிறக்கப்பட்டது. பயணிகள் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். கோளாறை சரி செய்யும் பணி நடக்கிறது. பயணிகளை மாற்று விமானம் மூலம் கொச்சிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை