உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு | Manmohansingh

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு | Manmohansingh

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்கு | Manmohansingh | Former prime minister | Last rites | Nigam bodh ghat | முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தனது 92வது வயதில் உடல் நலக்குறைவால் கடந்த 26ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக டில்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டது. நேற்று முழுவதும் அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் மன்மோகன் சிங் உடல் இன்று காலை 8 மணிக்கு காங்கிரஸ் தலைமையகத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அங்கு காங்கிரசார் உள்ளிட்ட தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் இறுதி சடங்கிற்காக டில்லி நிகம் போத் கட் மயானத்தை நோக்கி 10 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கியது. மன்மோகன் உடலை சுமந்து செல்லும் வாகனத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் சென்றனர். ஊர்வலம் நிகம் போத் கட் மயானத்தை அடைந்ததும் வாகனத்தில் இருந்து இறுதி சடங்க நடக்கும் இடத்துக்கு மன்மோகன் உடலை ராகுலும் சுமந்து சென்றார். பின்னர் அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் நட்டா, எதிர்கட்சி தலைவர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் மற்றும் மன்மோகன் குடும்பத்தினரும் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சக்கும் மன்மோகன் இறுதி சடங்கில் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முழு ராணுவ மரியாதையுடன், சீக்கிய முறைப்படி மன்மோகன் உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்தன. மன்மோகன் உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக்கொடி அவரது மனைவி குர்ஷரன் கவுரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியாக 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை