உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூக்கப்பட்ட வெங்கடேசன் யார்? கும்பலின் பகீர் பின்னணி | Chennai | Fortuner Venkadesan

தூக்கப்பட்ட வெங்கடேசன் யார்? கும்பலின் பகீர் பின்னணி | Chennai | Fortuner Venkadesan

தூக்கப்பட்ட வெங்கடேசன் யார்? கும்பலின் பகீர் பின்னணி | Chennai | Fortuner Venkadesan தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஏற்கனவே எச்சரித்துள்ளனர். கடந்த டிசம்பர் 21ம் தேதி மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாதவரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கோடி ரூபாய் மதிப்பிலான 16 கிலோ மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஷாகுல் ஹமீது, லாரன்ஸ், சரத்குமார், ஜான்சி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யும் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக மெத்தபெட்டமைன் போதை பொருள் மாதவரத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி, ஹரியானா, மணிப்பூரில் முகாமிட்டு இதுவரை 10 பேரை மாதவரம் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மெத்தபெட்டமைன் சப்ளை செய்யும் அளவுக்கு கைதான வெங்கடேசன் பெரிய நெட்வொர்க் வைத்திருந்தார். இவரது போதை பொருள் கடத்தல் வரலாறு மிக நீண்டது. 2014ல் தனது பள்ளி பருவ நண்பர் சிவக்குமாருடன் டெல்லியில் போதை மாத்திரை விற்பனையை தொடங்கினார். அப்போதே அதிக அளவில் பணம் புழங்கியது. சண்முகம், மணி, சுரேஷ் ஆகியோரை கூட்டாளிகளாக சேர்த்துக்கொண்டார். இடையில் போதைபொருள் கடத்தல் வழக்கில் பஞ்சாப் போலீசிடம் சிக்கிய வெங்கடேசன், அவரது கும்பலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வெங்கடேசன் சிறையியில் இருந்த போது அவரது கரம் இன்னும் நீள ஆரம்பித்தது. அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல போதை பொருள் கடத்தல் புள்ளிகளான மணிப்பூரைச் சேர்ந்த நிஜாமுதின், சண்டிகரைச் சேர்ந்த சண்ணிகல் நட்பு கிடைத்திருக்கிறது. இவர்கள் இருவரும் வடமாநிலங்களில் மெத்தம்பெட்டமைன் என்ற போதை பொருள் தயாரிக்க மூலப்பொருட்களை சப்ளை செய்துவந்துள்ளனர். வடமாநில கும்பலுடன் கூட்டு சேர்ந்த வெங்கடேசன் 2021ல் சிறையில் இருந்து வெளியே வந்தார். நிஜாமுதின், சண்ணிகல் மூலம் மணிப்பூரில் இருந்து தமிழகத்துக்கு போதைபொருள் கடத்த பெரிய டீல் போட்டார். இவர்களுக்கு என்று தனியாக ஆப் உள்ளது. செல்போனில் பேசினால் போலீசில் சிக்கி கொள்வோம் என்பதுக்கு பயந்து இந்த ஏற்பாடு செய்திருந்தனர். வேண்டிய போதைபொருட்களை ஆப் மூலம் ஆர்டர் செய்துவிட்டால் உடனே லாரிகள் மூலம் ரகசியமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும். சென்னைக்கு வரும் பார்சல்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுக்க ஷாகுல் ஹமீத், நரசிம்மன் ஆகியோரை நியமித்துள்ளார் வெங்கடேசன். பண பரிவர்த்தனை பெரும்பாலும் ஹவாலா முறை மூலம் நடந்து இருக்கிறது. 2014ல் போதை மாத்திரை விற்றதை விட இதில் பல மடங்கு லாபம் கிடைத்ததை கண்டு வெங்கடேசன் ஆச்சரியப்பட்டு போனார். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். விலை உயர்ந்த கார், பங்களாக்கள், நிலங்கள் வாங்கி குவித்தார். திடீரென இவ்வளவு பணம் எப்படி வந்தது அவரது வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ரியல் எஸ்டேட், சவுடு மண் விற்பனை பிஸினஸ் செய்தார். மாதவரம் ஏரியாவில் பார்ச்சூனர் வெங்கடேசன் என்றால் தான் அங்குள்ளவர்களுக்கு தெரியுமாம். பிஸினஸ் மூலம் பணம் வருகிறது என்பது போல காட்டிக்கொண்டு போதைபொருள் கடத்தலை முழு நேர தொழிலாக செய்துவந்துள்ளார். பார்ச்சூனர் சொகுசு காரில் சென்று போதைபொருட்களை கைமாற்றுவது வெங்கடேசன் ஸ்டைல். மணிப்பூரில் இருந்து 150 ரூபாய் விலையில் வாங்கப்படும் மூலப்பொருட்களை வைத்து அருப்புகோட்டையில் உள்ள ஆய்வகத்தில் மெத்தம்பெட்டமைன் தயாரித்துவந்துள்ளார். 150 ரூபாய் மூலப்பொருளை மெத்தம்பெட்டமைனாக மாற்றினால் 3000 ரூபாய் விலைக்கு விற்க முடியுமாம். இதனால் குறுகிய காலத்தில் கோடிகளில் பணம் கொட்ட ஆரம்பித்துள்ளது. பண பலம், செல்வாக்கு மிக்க நபராக மாறியதால் போலீஸ் பிடியிலும் சிக்கவில்லை. இப்போது அவருக்கு கீழ் செயல்பட்டு வந்த நெட்வொர்க் சிக்கியதால் மொத்த கும்பலும் தூக்கப்பட்டிருக்கிறது. வெங்கடேசன் செல்போனை ஆய்வு செய்தபோது சென்னை முழுவதுக்கும் மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்யும் டீலராக இருந்தது தெரியவந்துள்ளது. வெங்கடேசனுக்கு மூலப்பொருள் அனுப்பும் நிஜாமுதின், சண்டிக்கல்லைப் பிடிக்க தனிப்படை போலீஸார் மணிப்பூருக்கும் சண்டிகருக்கும் சென்றுள்ளனர்.

டிச 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை