டில்லி கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம் Modi Speech at BJP Public Meeting| Modi at Delhi| AAP| Delh
டில்லி கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசம் Modi Speech at BJP Public Meeting| Modi at Delhi| AAP| Delhi election டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ரோஹினி பகுதியில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 21ம் நுாற்றாண்டில் 25 ஆண்டுகள் கடந்துள்ளன. வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தில் நாம் சாதிக்க வேண்டியவை ஏராளம் உள்ளன. டில்லியின் வளர்ச்சிக்காவும், டில்லி மக்கள் நலனுக்காகவும், பாஜவை ஆதரியுங்கள் என உங்களிடம் கேட்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக டில்லியை ஆளும் அரசால், ஏராளமான இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளன. டில்லி முழுதும் ஒரே குரல் ஒலிக்கிறது. பேரழிவை இனியும் பொறுக்க மாட்டோம் என மக்கள் கூறுகின்றனர். வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜ மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மத்தியிலும், பாஜ தலைமையில் தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைந்துள்ளது. லோக்சபா தேர்தலில் டில்லி மக்கள் பாஜவுக்கு அமோக ஆதரவு அளித்ததுபோல, வரும் சட்டசபை தேர்தலிலும், மக்கள் பாஜவை ஆதரிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. டில்லி மக்களின் நலனுக்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. உலக நாடுகள் வியக்கும் வண்ணம் நாட்டின் தலைநகரை கட்டமைக்க விரும்புகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜ அரசு ஆட்சி செய்தால் மட்டும் தான் இப்படிப்பட்ட முன்னேற்றங்கள் சாத்தியமாகும். டில்லியில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரமாண்ட திட்டங்களை மத்திய பாஜ அரசு தான் செயல்படுத்துகிறது. டில்லியின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குடிசை பகுதி மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில், 1,675 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் பல குடியிருப்புகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும். கோவிட் காலத்தில் மக்கள் மருத்துவம் தேடி அலைந்த நேரத்தில், இங்குள்ள ஆட்சியாளர்கள் கண்ணாடி மாளிகை கட்டுவதில் கவனம் செலுத்தினர். இவர்கள் தங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவு செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டில்லி மக்கள் இனியும் இந்த பேரழிவை பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். பாஜ ஆட்சிக்கு வந்தால், டில்லியில் முக்கிய அரசு திட்டங்கள் முடக்கப்படும் என மாநிலத்தை ஆளும் கட்சி பொய் கூறுகிறது. உண்மையில், அவர்கள் தான் மத்திய அரசு திட்டங்களை இங்கு செயல்படுத்தவிடாமல் மக்களை வஞ்சிக்கின்றனர். மழைக்காலத்தில் வெள்ளம், வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் என எல்லா காலநிலையிலும் டில்லி வாசிகள் தவிக்கின்றனர். இந்தபிரச்னைக்கெல்லாம் முடிவு கட்ட டில்லியில் பாஜவின் டபுள் இன்ஜின் சர்க்கார் அமைய வேண்டும். டில்லியில் வர்ச்சியை கருத்தில் கொண்டு, மக்கள் ஓட்டளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.