கட்டுமான நிறுவனங்களில் ஐடி அதிரடி: பின்னணி இதுதான் IT raid
கட்டுமான நிறுவனங்களில் ஐடி அதிரடி: பின்னணி இதுதான் IT raid income tax raid 26 places 6 places in chennai steel companies and builders tiruvottiyur teynampet broadway poonamallee erode construction company Edppadi palanisami relative சென்னையில் இன்று 6 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். கட்டுமான நிறுவனங்கள் மற்றும் இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சப்ளை செய்யும் ஸ்டீல் நிறுவனங்களில் சோதனை நடக்கிறது. அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக வருமான வரி அதிகாரிகள் கூறினர். ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில் என்ஆர் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியாருக்காக கட்டுமான பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கிய உறவினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஈரோட்டில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ் பி எல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் உள்ள ஜே ஆர் மெட்டல் நிறுவனம் உட்பட சென்னையில் உள்ள 6 இடங்களிலும் காலை முதலே ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பூந்தமல்லி, பூக்கடை ஆகிய இடங்களிலும் சோதனை நடக்கிறது. சோதனைக்கு வரும் வருமான வரி அதிகாரிகள் தாக்கப்படுவது, மிரட்டப்படுவது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் வருமான வரித்துறை சோதனை நடக்கும் 26 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாலை வரை ரெய்டு தொடரும்; அதன்பிறகே, ரெய்டில் சிக்கியது என்னென்ன என்பது பற்றி அறிக்கை வெளியிடப்படும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.