மனிதாபிமானமற்ற தாக்குதல் என ஜெலன்ஸ்கி கண்டனம் | Russian missile attack | Southern ukraine
மனிதாபிமானமற்ற தாக்குதல் என ஜெலன்ஸ்கி கண்டனம் | Russian missile attack | Southern ukraine | 13 loss lives | Ukrainian President Zelenskyy | உக்ரைன் - ரஷ்யா இடையே நடக்கும் போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. ரஷ்யா நடத்திய தீவிர தாக்குதல்களில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல பகுதிகள் சின்னாபின்னாக சிதைந்துள்ளன. டொனட்ஸ்க், லுகான்ஸ்க் பிராந்தியங்களின் சில பகுதிகளை மட்டும் ரஷ்யா கைப்பற்றியது. 5 மாதங்களுக்கு முன் உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தி ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றியது. அதை மீண்டும் உக்ரைனிடம் இருந்து மீட்க ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. அந்த வகையில் மக்கள் வசிக்கும் பகுதியில் மற்றொரு வெடிகுண்டு தாக்குதலை ரஷ்யா அரங்கேற்றி இருக்கிறது. உக்ரைனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் ஸபோரிஷியா. இங்குள்ள அப்பார்ட்மென்ட்கள் மீது தான் ரஷ்ய ராணுவத்தின் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 13 பேர் உடல் சிதறி இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இது ரஷ்யாவின் மனிதாபிமானமற்ற தாக்குதல் என உக்ரைன் அதிபர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டித்துள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த மக்களுக்கு அவசர சிகிச்சை பிரிவினர் சிகிச்சை கொடுப்பது போன்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சாதாரண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிந்தும், ஒரு நகரத்தின் மீது வான்வழி குண்டுகளை வீசுவதை விட கொடுமையானது வேறு எதுவும் இல்லை. உக்ரைன் மக்களின் உயிர் பாதுகாப்பு முக்கியம். ரஷ்யா இதற்கு உரிய பதில் சொல்லியே ஆக வேண்டும். பலத்தால் மட்டுமே இதுபோன்ற போரை நிரந்தர சமாதானத்துடன் முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.