உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்துக்களுக்கு ஆதரவான லிபரல் கட்சி தலைவர் ஆர்யா indian origin|canadian|mp|chandra arya|pm race|

இந்துக்களுக்கு ஆதரவான லிபரல் கட்சி தலைவர் ஆர்யா indian origin|canadian|mp|chandra arya|pm race|

இந்துக்களுக்கு ஆதரவான லிபரல் கட்சி தலைவர் ஆர்யா indian origin|canadian|mp|chandra arya|pm race| கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 6ம் தேதி பதவி விலகினார். அவர் சார்ந்த லிபரல் கட்சி தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இந்த வருடம் அக்டோபரில் கனடாவில் தேர்தல் நடக்க உள்ள சூழலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லிபரல் கட்சி எம்.பி. சந்திரா ஆர்யா அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து அவர் கூறியதாவது - இறையாண்மை கொண்ட குடியரசாக கனடாவை மாற்ற விரும்புகிறேன். நாட்டை மீண்டும் கட்டி எழுப்பவும், எதிர்கால சந்ததிகளுக்காக கனடா தேசத்து வளங்களை பாதுகாக்கவும், பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறேன். நமது குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகளின் நலன்களுக்காக நாம் சில துணிச்சலான முடிவுகளை எடுத்தாக வேண்டிய தருணத்தில் உள்ளோம். பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது அறிவு மற்றும் அனுபவத்தை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார். 61 வயதாகும் சந்திரா ஆர்யா கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடகாவில் கல்லூரி படிப்பை முடித்தார். 20 ஆண்டுக்கு முன் கனடாவில் குடியேறினார். கனடாவில் பொறியாளராக, முதலீட்டு ஆலோசகராக, தொழில் முனைவோராக இருந்தார். அதன்பிறகே அரசியலில் குதித்தார். தற்போது ஒட்டாடா எம்பியாக உள்ளார். 2015ல் முதல் முறையாக கனடா பார்லிமென்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019ல் மீண்டும் எம்.பி. ஆனார். 2022ல் பார்லிமென்ட்டில் தாய் மொழியான கன்னடத்தில் சந்திரா ஆர்யா பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இவர், கனடாவில் வசிக்கும் இந்துக்களுக்கு ஆதரவானவர். 2024ல் இந்து பாரம்பரிய மாதத்தை நினைவு கூறும் வகையில், கனடா பார்லிமென்ட்டுக்கு வெளியே ஓம் வார்த்தையுடன் கூடிய காவி கொடியை அவர் ஏற்றினார். இது விவாத பொருளானது. ஆனாலும் கனடா அரசியலில் இந்துக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க அழைப்பு விடுக்கும்விதமாக அப்படி செய்ததாக விளக்கமளித்தார். ஜஸ்டின் ட்ரூடோவின் தீவிர ஆதரவாளரான சந்திரா ஆர்யா, வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நடந்தபோதும் அதற்கு எதிராக குரல் கொடுத்தார். இதுவரை ஆர்யாவும், முன்னாள் எம்.பி. பிராங்க் பயலிஸ் Frank Baylis ஆகியோர் மட்டுமே பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட இன்னும் சிலரும் பிரதமர் ரேசில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லிபரல் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுபவர்தான் அடுத்த பிரதமர். அதுவரை பிரதமர் பதவியில் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9ம் தேதி லிபரல் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை