உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலையார் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் | Annamalayar temple | Nandhi | Surya bhagavan

அண்ணாமலையார் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் | Annamalayar temple | Nandhi | Surya bhagavan

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மூலவர், நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சியளித்த நிகழ்வு இன்று நடந்தது. அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஆண்டுக்கு ஒரு முறை மாட்டு பொங்கலன்று மட்டுமே நடக்கும் நிகழ்வாக அண்ணாமலையார் நந்தி பகவானுக்கு காட்சியளித்தார். இதை முன்னிட்டு நந்தி பகவானுக்கு காய்கறிகள், பழங்கள், முருக்கு, லட்டு, அதிரசம், பணம் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காராம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு காட்சியளித்த பின்னர் உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார் திட்டிவாசல் வழியாக சூரிய பகவானுக்கு காட்சியளித்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

ஜன 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ