உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மகாராஷ்டிராவில் மெகா அரசியல் பூகம்பம்? | sharad pawar vs ajit pawar | pawar family | maha politics

மகாராஷ்டிராவில் மெகா அரசியல் பூகம்பம்? | sharad pawar vs ajit pawar | pawar family | maha politics

மகாராஷ்டிராவில் மெகா அரசியல் பூகம்பம்? | sharad pawar vs ajit pawar | pawar family | maha politics மஹாராஷ்டிரா அரசியலில் சக்தி வாய்ந்த குடும்பம் சரத் பவாரின் பரிவாரம். மஹாராஷ்டிராவின் பாராமதி பகுதியின் முடிசூடா மன்னர் என்று அழைக்கப்படுபவர் சரத் பவார். இவருடைய பரிவாரத்தில் உள்ள பலர் பெரிய பதவிகளில் உள்ளனர். சகோதரன் மகன் அஜித் பவார் இப்போது துணை முதல்வர்; மகள் சுப்ரியா சுலே எம்.பி.; அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா ராஜ்யசபா எம்.பி.... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சரத் பவாரின் கட்சி உடைந்து, சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பெரும் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு சரத் பவாரின் நடவடிக்கைகள் பலரையும் சந்தேகப்பட வைத்துள்ளன. பா.ஜவை கடுமையாக விமர்சித்து வந்தவர், திடீரென ஆர்எஸ்எஸ் இயக்க தொண்டர்களை பாராட்டி பேசினார்; மேலும், பா.ஜவுக்கு எதிராக அதிகம் பேசுவதையும் குறைத்துக்கொண்டார். இந்த நிலையில் தான் பா.ஜ., கூட்டணியில் சரத் பவார் இணைவார் என்று டில்லி வட்டாரங்களில் செய்திகள் அடிபட்டன. இன்னொரு பக்கம், துணை முதல்வர் அஜித் பவார் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வருகிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்ற மஹாராஷ்டிரா அரசு நிகழ்ச்சியிலும் அஜித் பங்கேற்கவில்லை. சமீபத்தில், பவார் குடும்பத்தின் சொந்த ஊரான, பாராமதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் பவார், அஜித் பவார், சுப்ரியா சுலே, சுனேத்ரா ஆகியோர் பங்கேற்றனர். இதில் சரத்தும், அஜித்தும் கை கொடுத்து கொள்வர், ஒருவரோடு ஒருவர் பேசுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது; ஆனால், அஜித் பவாரோ, சரத்தை கண்டு கொள்ளவே இல்லை. தவிர, இவர்கள் இரண்டு பேருடைய நாற்காலிகளும், பக்கத்தில் இல்லாமல் தள்ளி போடப்பட்டிருந்தன. இவர்கள் குடும்பத்தில் என்ன தான் நடக்கிறது என்று டில்லி அரசியல்வாதிகளுக்கு குழப்பமாக உள்ளது.

ஜன 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை