அமெரிக்க அதிபர் ஆனதும் அதிரடி உத்தரவு போட்ட டிரம்ப் america president| donalad trump| who| trump or
அமெரிக்க அதிபர் ஆனதும் அதிரடி உத்தரவு போட்ட டிரம்ப் america president| donalad trump| who| trump orders அமெரிக்காவின் 47 வது அதிபராக பதவியேற்ற டெனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குவதாக தமது உரையில் தெரிவித்தார். அதிபர் ஆன கையோடு பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் சில முக்கியமானவற்றை பார்க்கலாம். கடந்த தேர்தலில் டிரம்ப் தேற்றதால், 2021 ஜனவரியில் அவரது ஆதரவாளர்கள் பார்லிமென்ட்டில் புகுந்து போராட்டம் நடத்தினர். அதில் 1500 பேர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார் டிரம்ப். அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில் தேசிய அவரச நிலையை அறிவித்தார். அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை 4 மாதங்களுக்கு நிறுத்தவும் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். அதிகளவில் புலம்பெயர்ந்து வரும் மக்களை ஏற்கும் திறன் அமெரிக்காவுக்கு இல்லை என்றார். சட்டவிரோதமாக அமெரிக்கவில் குடியேறியவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவையும் அதிபர் டிரம்ப் எடுத்துள்ளார். அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு தானாகவே அந்நாட்டு குடியுரிமை கிடைக்கும். அந்த சட்டத்தை திருத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்று இருந்தால் மட்டுமே குழந்தைக்கும் இனி குடியுரிமை கிடைக்கும். தன்பாலினத்தவர் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சம உரிமையை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். ஆண், பெண் என்ற இரு பாலினத்தவரை மட்டுமே அரசு அங்கீகரிக்கும். கோவிட் தொற்றின்போது அமெரிக்க அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். தற்போது அதை ரத்து செய்து அனைவரும் அலுவலகம் வர அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க கருதுகிறது. அதற்கு தடை விதிப்பதற்கு முதற்கட்டமாக 75 நாட்களுக்கு நிறுத்திவைத்தார் அதிபர் டிரம்ப். டிக்டாக் செயலியின் 50 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு தர வேண்டும் என டிரம்ப் நிர்பந்தித்து உள்ளார். பிப்ரவரி 1 முதல் கனடா, மெக்சிகோ மீது 25 சதவீத இறக்குமதி விதிக்க போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதை தொடர்ந்தால், அதே அளவு வரியை இந்திய பொருட்கள் மீது விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் சீனாவுக்கு 60 சதவீத வரி விதிப்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டிரம்பின் அதிரடியாக அறிவித்து உள்ளார். கோவிட் தொற்று பரவலை WHO சரியாக கையாளவில்லை; கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலகை தவறாக வழிநடத்த WHOக்கு சீனா அழுத்தம் கொடுப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதால் அந்த அமைப்புக்கு பல நூறு மில்லியன் டாலர் நிதியுதவியை இழக்க உள்ளது. 2019ல் மட்டும் அமெரிக்க 400 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. இதே போல் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் அமெரிக்க வெளியேற முடிவு செய்து இருக்கிறது. ட்ரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த போதே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற கையெழுத்திட்டார். ஆனால், பைடன் அதிபர் ஆனதும் அதை ரத்து செய்தார். தற்போது டிரம்ப் அதிபர் ஆனதும், அமெரிக்கா மீண்டும் வெளியேறி உள்ளது.