/ தினமலர் டிவி
/ பொது
/ நள்ளிரவில் திருவல்லிக்கேணியை உலுக்கிய சம்பவம் | Chennai Boxer | Chennai Boxer Case
நள்ளிரவில் திருவல்லிக்கேணியை உலுக்கிய சம்பவம் | Chennai Boxer | Chennai Boxer Case
சென்னை திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டையை சேர்ந்தவர் தனுஷ், வயது 24. குத்துச்சண்டை வீரரான இவர் தமிழகம் சார்பில் பல குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளார். போலீசில் சேர வேண்டும் என்பது இவரது ஆசை. காவல்துறை தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களை தாக்கியதாக கூறப்பட்ட நிலையில் தனுஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தனது வீட்டின் அருகே நண்பருடன் பேசிக்கொண்டிருந்த தனுஷை சில மர்ம நபர்கள் அரிவாளால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.
ஜன 30, 2025