உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாக் பொய்யை சல்லி சல்லியாக நொறுக்கிய மோடி | india vs pakistan | operation sindoor | Russia S-400

பாக் பொய்யை சல்லி சல்லியாக நொறுக்கிய மோடி | india vs pakistan | operation sindoor | Russia S-400

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே பயங்கர யுத்தம் வெடித்தது. பாகிஸ்தான் நடத்திய ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்தியா வீரியமான பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன், ஏவுகணைகள் எல்லாவற்றையும் வானத்திலேயே இந்தியா பொசுக்கியது. நமக்கு லேசான சேதம் தான். ஆனால் இந்தியா அனுப்பிய ட்ரோன், ஏவுகணைகளை பாகிஸ்தானால் சமாளிக்க முடியவில்லை. 11 ராணுவ தளங்களை இந்தியா குண்டு வீசி சேதப்படுத்தியது. குறிப்பாக 6 விமானபடை தளங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சண்டையை நிறுத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்தது. அதன் பேரில் இப்போது போர் நிறுத்தம் வந்திருக்கிறது. இதற்கிடையே இந்தியாவின் சக்தி வாய்ந்த எஸ்-400 வான் பாதுகாப்பு கவசத்தை தாக்கி அழித்து விட்டதாக பாகிஸ்தான் அளந்து விட்டது. பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையின் போது பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தில் இதை இந்தியா நிலை நிறுத்தி இருந்தது. பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன், ஏவுகணைகளை சின்னாப்பின்னமாக சிதறடித்தது இந்த தடுப்பு சிஸ்டம் தான். கிட்டத்தட்ட 15 நகரங்களை குறி வைத்து பாகிஸ்தான் அனுப்பிய ட்ரோன், ஏவுகணைகளை ஆதம்பூரில் இருந்தபடி இடைமறிப்பு ஏவுகணைகளை அனுப்பி நடுவானிலேயே அழித்தது. இவ்வளவு சக்தி வாய்ந்த வான் தடுப்பு சிஸ்டத்தை தான் அழித்து விட்டதாக பாகிஸ்தான் பொய் சொன்னது. எடிட் செய்து உருவாக்கப்பட்ட சாட்டிலைட் போட்டோவையும் ஆதாரமாக காட்டியது. இந்த நிலையில் ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்றார். பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான ஆபரேஷனில் சிறப்பாக செயல்பட்டதற்காக வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வீரர்கள் மத்தியில் அவர்களை பாராட்டி உரையாற்றவும் செய்தார். எல்லாவற்றுக்கும் மேல் இதே நிகழ்வில் பாகிஸ்தானை ட்ரோல் செய்யும் தரமான சம்பவத்தையும் மறைமுகமாக செய்தார். அதாவது பாகிஸ்தான் தகர்த்ததாக சொன்ன அதே எஸ்-400 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் பின்னணியில் போஸ் கொடுத்தார் மோடி. சிறு வடு கூட இல்லாமல் கம்பீரமாக நின்றது அந்த ஆயுதம். அதை தான் தகர்த்து விட்டதாக பாகிஸ்தான் சொல்லி இருந்தது. பாகிஸ்தான் சொன்னது பச்சைப் பொய் என்பதை நேரடியாக களத்துக்கே சென்று உலகுக்கு மோடி நிரூபித்து காட்டி விட்டார். மோடி போஸ் கொடுக்கும் காட்சிகளை வைத்து இப்போது பாகிஸ்தானை ஆளாளுக்கு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். எஸ்-400 ரஷ்யா நமக்கு தந்த சிறந்த அஸ்திரம். இதற்கு சுதர்சன சக்கரம் என்று நாம் பெயர் வைத்துள்ளோம். அதாவது, அதர்மத்தை அழித்து தர்மம் காக்க, கடவுள் மஹா விஷ்ணு கையில் சுதர்சன சக்கரம் எப்போதும் இருக்கும். மகாபாரதத்தில் விஷ்ணு அவதாரமான கிருஷ்ணரும் தேவைப்படும்போது, சுதர்சன சக்கரத்தை கையில் எடுத்து இருக்கிறார். அதே பாணியில் தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்த அஸ்திரத்தை இந்தியா பயன்படுத்தியது. உலகில் உள்ள சக்தி வாய்ந்த வான் தடுப்பு கவசங்களில் முக்கியமானது எஸ்-400. ரஷ்யாவிடம் 5 ஆயுதங்கள் வாங்க நாம் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதில் மூன்று வந்து விட்டது. இன்னும் 2 வர வேண்டும். இதை வைத்து தரையில் இருந்து ஏவுகணைகளை ஏவி, வானில் வரும் ட்ரோன், ஏவுகணைகள், போர் விமானங்களை தகர்க்க முடியும். சுதர்சன சக்கரம் மூலம் சிறியது முதல் பெரியது வரை 4 வகையான இடைமறிப்பு ஏவுகணைகளை வீசலாம். எதிரிகளின் ஆயுதங்கள் 600 கிலோ மீட்டரில் வரும்போதே அவற்றை மானிட்டர் செய்ய முடியும். 400 கிலோ மீட்டருக்குள் வந்ததும் தாக்கி அழிக்கலாம். ஒரே நேரத்தில் எதிரிகளின் 100 ஆயுதங்களை குறி வைக்க முடியும். யுத்தத்தில் இந்த ஆயுதம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதையும் ஆதம்பூர் சென்ற மோடி விளக்கினார். மொத்தத்தில், மோடியின் ஆதம்பூர் விசிட்டுக்கு பிறகு பொய் சொன்ன பாகிஸ்தான் முகத்திரை உலக நாடுகள் முன்பு கிழிந்து தொங்குகிறது.

மே 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை