ஸ்டாலின் கையை இறுக பிடித்து தட்டிய மோடி-கலகல காட்சி Modi Stalin meets | niti aayog | revanth reddy
ஸ்டாலின் கையை இறுக பிடித்து தட்டிய மோடி-கலகல காட்சி Modi Stalin meets | niti aayog | revanth reddy டில்லியில் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாக கூட்டம் நடந்தது. மோடி தலைமையில் பல மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். ‛டீம் இந்தியா போல் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால், இந்தியாவால் சாத்தியமற்ற காரியம் என்று ஒன்று இருக்கவே இருக்காது என மோடி பேசினார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டம் முடிந்ததும், தேநீர், சிற்றுண்டி விருந்தில் மோடி கலகலப்பாக காணப்பட்டார். பாஜ அரசை கடுமையாக எதிர்க்கும் கட்சிகளை சேர்ந்த முதல்வர்களிடம் மோடி மனம் திறந்த அன்போடு பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கைகளை இறுக பிடித்து தட்டிக்கொடுத்தார் மோடி. இருவரும் முகமலர்ச்சியுடன் பேசுவதை பார்க்க முடிந்தது. அதே போல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆம் ஆத்மியை சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், முக்தி மோட்சா கட்சியை சேர்ந்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரிடம் மோடி புன்னகை சிந்த பேசினார். இந்த காட்சிகள் கூட்டத்துக்கு வந்த மற்ற தலைவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.