உலக நாடுகளை வாய் பிளக்க வைத்த இந்தியாவின் அசுர வளர்ச்சி | India 4th largest economy | top 10 GDPs
உலக நாடுகளை வாய் பிளக்க வைத்த இந்தியாவின் அசுர வளர்ச்சி | India 4th largest economy | top 10 GDPs உலகின் பெரும் பொருளாதார நாடுகள் தரவரிசை பட்டியலை ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் இப்போது மீண்டும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருவதை நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியம் புள்ளி விவரத்துடன் வெளியிட்டுள்ளார். உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா இப்போது முன்னேறி இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளி விவரம் இதை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. 4வது இடத்தில் இருந்த ஜப்பானை முந்தி இந்த நிலையை எட்டியுள்ளோம். இதே வளர்ச்சி தொடர்ந்தால், அடுத்த 3 ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்தி, 3வது இடத்துக்கு வந்து விடுவோம். இதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்போது ஜெர்மனி ஜிடிபி 403.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நம் ஜிடிபி 356 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. 2014ல் இந்த பட்டியலில், இந்தியா 10வது இடத்தில் இருந்தது. 2022 செப்டம்பரில் 5வது இடத்தை பிடித்தோம். அதன்பின் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால், இப்போது 4வது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி உள்ளோம். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைப்படி 2014ல் இந்தியாவின் தனிநபர் வருவாய், 1,22,476 ரூபாயாக இருந்தது. இது 2025ல், 2,45,293 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று சுப்பிரமணியம் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிவரப்படி பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சீனா, 3வது இடத்தில் ஜெர்மனி, 4வது இடத்தில் இந்தியா, 5வது இடத்தில் ஜப்பான் நாடுகள் இருக்கின்றன. 6 முதல் 10 வரை முறையே பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, பிரேசில் நாடுகள் இருக்கின்றன.