உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாமக எம்எல்ஏ அருள், ஜி.கே.மணி ஆஸ்பிடலில் அட்மிட் | PMK | Anbumani | GK Mani

பாமக எம்எல்ஏ அருள், ஜி.கே.மணி ஆஸ்பிடலில் அட்மிட் | PMK | Anbumani | GK Mani

பாமக எம்எல்ஏ அருள், ஜி.கே.மணி ஆஸ்பிடலில் அட்மிட் | PMK | Anbumani | GK Mani பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், உயிர் இருக்கும் வரை நானே தலைவர் என தீர்க்கமாக கூறி விட்டார். பாமகவில் இரு கோஷ்டிகள் உருவெடுத்து அன்புமணி பக்கமே அதிக நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அன்புமணி ஒவ்வொரு மாவட்டமாக கூட்டம் நடத்தி வருகிறார். முந்தைய கூட்டத்தில் அவர் பேசும் போது ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டும் இன்னும் பிரச்னை ஓய்ந்த பாடில்லை. சேலம் மற்றும் அடுத்தாக தருமபுரியில் நடக்க உள்ள கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, அன்புமணி நாளை சேலம் செல்ல உள்ளார். இந்த சமயத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் அட்மிட் ஆகி வருகின்றனர். சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணியும் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாமக முக்கிய தலைவர்கள் நெஞ்சு வலி காரணமாக அடுத்தடுத்து அட்மிட் ஆகிய சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

ஜூன் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !