தம்பதி மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரன் | kanniyakumari | Tea shop
தம்பதி மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய கொடூரன் | kanniyakumari | Tea shop கன்னியாகுமரி தடிகாரங்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் வினு. அங்குள்ள இந்திரா நகர் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். காலை, மாலை நேரங்களில் வினு மட்டும் கடையில் இருப்பார். பகலில் அவரது மனைவி டீ கடையை கவனித்துக்கொள்வார். இங்கு விஜய் ஆனந்த் என்பவர் அடிக்கடி டீ குடிக்க வந்துள்ளார். வினு மனைவியிடம் வேண்டும் என்றே பேச்சு கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் விஜய் ஆனந்த் பேசுவது எல்லை மீறி சென்றுள்ளது. முகம் சுளிக்கும் வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்துள்ளார். கடையில் யாரும் இல்லாத போது பாலியல் சீண்டலில் ஈடுபடவும் முயற்சித்துள்ளார். இதனால் பயந்து போன வினுவின் மனைவி கணவரிடம் கூறி அழுதுள்ளார். அவனை நான் பார்த்து கொள்கிறேன் என மனைவிக்கு வினு நம்பிக்கை கொடுத்தார். இதையடுத்து மறுநாள் வழக்கம் போல விஜய் ஆனந்த் டீ கடைக்கு வந்துள்ளார். அவரை கண்டித்த வினு, தன் மனைவியிடம் பேசியது குறித்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் ஆனந்த் தம்பதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பஜ்ஜி சுட வைத்திருந்த கொதிக்கும் எண்ணெய் எடுத்து இருவர் மீதும் ஊற்றியுள்ளார். வினுவும் அவரது மனைவியும் கொதிக்கும் எண்ணெய் பட்டு அலறி உள்ளனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆஸ்பிடலில் சேர்ந்தனர். இது குறித்து கீரிப்பாறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. காட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த விஜய் ஆனந்த் கைது செய்யப்பட்டான். பாலியல் சீண்டலை தட்டி கேட்ட தம்பதி மீது நடந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியது.