உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வயநாடு மலையில் மீண்டும் நிலச்சரிவு? பீதியில் கேரளா | Wayanad | Rain | Landslide

வயநாடு மலையில் மீண்டும் நிலச்சரிவு? பீதியில் கேரளா | Wayanad | Rain | Landslide

வயநாடு மலையில் மீண்டும் நிலச்சரிவு? பீதியில் கேரளா | Wayanad | Rain | Landslide கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே சீசன் போது தான் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலரை காணவில்லை. இன்னும் சிலர் உடல் ஊனமடைந்துள்ளனர். இந்த பேரழிவின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்குள் அங்கே மீண்டும் கனமழை கொட்டுகிறது. புன்னம்புழா ஆற்றில் நீர் மட்டம்உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே தான் கடந்தாண்டு நிலச்சரிவின் போது ராணுவத்தால் பெய்லி பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் மறுபுறம் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் துவங்கி உள்ளனர். கனமழை காரணமாக முண்டக்கை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அப்பகுதியில் பெரும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் சொல்கின்றனர். இதையடுத்து புன்னம்புழா ஆற்றில் சேற்றுடன் கலங்கிய நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மண்சரிவு ஏற்பட்டதா என அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து வருகின்றனர். இதே போல சூரல்மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புஞ்சிரிமட்டம் மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஆய்வு செய்ய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இப்போதைக்கு நிலச்சரிவு எதுவும் ஏற்படவில்லை. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் நிலச்சரிவு ஏற்பட்டதை நேரில் கண்டோம் என உள்ளூர் மக்கள் சொல்கின்றனர். வயநாட்டின் புஞ்சிரிமட்டத்திற்கு மேலுள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவுகளின் மண் மற்றும் தேங்கியிருந்த கழிவுகள் மழைநீருடன் கலந்து சிவப்பு நிறமாக பாய்ந்து செல்கிறது. மண் அரிப்பு ஏற்பட்டு சேறு கலந்த நீர் ஆற்றில் ஓடுவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சரிவு அபாயம் இருக்கும் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு, போலீஸ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மழை பெய்யும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி