6 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த கோட்டை மக்கள் நலவாழ்வு மன்றம்! Marriage Ceremony
6 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த கோட்டை மக்கள் நலவாழ்வு மன்றம்! Marriage Ceremony | Religions and Cultures | Covai கோவையில் கோட்டை மக்கள் நலவாழ்வு மன்றம் சார்பில் ஆறு முஸ்லிம் ஜோடிகளுக்கு மத நல்லிணக்க திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கோவை மாவட்ட அரசு தலைமை காஜி மவுலவி அப்துல் ரஹீம் இம்தாதி ஹஜ்ரத், சிவ ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சுவாமி, கொங்கு காசி அஷ்ட பைரவர் கோயில் நிர்வாகி மற்றும் பாதிரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடந்தது. திருமணம் செய்த மணமக்களுக்கு 16 கிராம் தங்கம், பீரோ, கட்டில், மெத்தை, குக்கர், எவர்சில்வர் சாமான்கள், வேட்டி சேலை உள்ளிட்ட பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், திமுக கோவை மாநகர் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.