உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக, பாஜவுக்கு அதிர்ச்சி: திமுக போட்ட திட்டம் இதுதான் dmk vs admk tn election 2026 | tvk vijay

அதிமுக, பாஜவுக்கு அதிர்ச்சி: திமுக போட்ட திட்டம் இதுதான் dmk vs admk tn election 2026 | tvk vijay

அதிமுக, பாஜவுக்கு அதிர்ச்சி: திமுக போட்ட திட்டம் இதுதான் dmk vs admk tn election 2026 | tvk vijay 2026 சட்டசபை தேர்தலுக்கான தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. கூட்டணி தொடர்பாக திரைமறைவில் அரசியல் கட்சிகள் பேச்சுகளை நடத்தி வருகின்றன. எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. 2019ல் அமைந்த திமுக கூட்டணி சிதறாமல் அப்படியே இருந்தாலும், சிறுபான்மையினர் ஓட்டு வங்கியில் சிறு சேதாரத்தையாவது விஜய் ஏற்படுத்துவார் என்ற அச்சம் திமுகவினரிடம் உள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக வலுவான கூட்டணி அமைத்து விட்டால், ஆட்சியையே இழக்க நேரிடும் என்ற அச்சமும் திமுகவுக்கு இருக்கிறது. ஏப்ரல் 11ல் அறிவிக்கப்பட்ட அதிமுக, பாஜ கூட்டணியில், மூன்றரை மாதங்கள் கடந்தும் வேறு கட்சிகள் இன்று வரை இணையவில்லை. கூட்டணியை அறிவிக்க மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோதே, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் இணைய இருப்பதாக கூறப்பட்டது; ஆனால் அது நடக்கவில்லை. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. ராமதாஸ்-அன்புமணி மோதல் முடிவுக்கு வராததால், பாமக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜ்யசபா எம்பி பதவி தராததால், தேமுதிகவும் பழனிசாமி மீது கோபத்தில் உள்ளது. தவெக அல்லது நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, மெகா கூட்டணி அமைப்போம் என்று கூறி வருகிறார். அவரின் இந்த முயற்சியை முறியடிக்க பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ள கட்சிகளை, தங்கள் கூட்டணியில் சேர்ப்பது அல்லது தவெக கூட்டணிக்கு மடைமாற்றி விடுவது உள்ளிட்ட பல வியூகங்களை திமுக வகுத்து வருவதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க பாஜ எவ்வளவோ முயற்சித்தும் பழனிசாமி மறுத்து வருகிறார். இதனால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக கூட்டணி இழப்பை சந்திக்கும். பாமக இல்லாவிட்டால் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றியும் கிடைக்காது. வேறு கட்சிகள் இணையாமல் அதிமுக, பாஜ கூட்டணியை தனிமைப்படுத்தும் முதல்வர் ஸ்டாலினின் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று கூறினர்.

ஜூலை 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை