உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அவிநாசி அருகே மதுபோதையில் நடந்த விபரீத சம்பவம்! Tiruppur | 2 Person died | 150 feet well

அவிநாசி அருகே மதுபோதையில் நடந்த விபரீத சம்பவம்! Tiruppur | 2 Person died | 150 feet well

அவிநாசி அருகே மதுபோதையில் நடந்த விபரீத சம்பவம்! Tiruppur | 2 Person died | 150 feet well திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார் வயது 37. 6 மாதங்களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தாயுடன் வசித்து வருகிறார். விவாகரத்துக்கு பிறகு நவீன்குமார் மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். நேற்றிரவு அதீத மது போதையில் இருந்த நவீன்குமார், வாடகைகாரில் வீட்டுக்கு வந்தார். கார் டிரைவரின் செல்போனை வாங்கி தனது தாய்க்கு போன் செய்த நவீன்குமார், வாடகை கொடுக்க பணம் வேண்டும் என கூறினார். வீட்டை விட்டு வெளியே வந்த அவரது தாய், நவீன்குமாரை கடுமையாக திட்டினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நவீன்குமார், தனது வீட்டின் அருகே உள்ள 150 அடி ஆழ கிணற்றில் குதித்தார். செய்வதறியாது திகைத்த நவீன்குமாரின் தாய், வீட்டில் வாடகைக்கு இருக்கும் நவீன்குமாரின் நண்பன் பிரவீன்ராஜை உதவிக்கு அழைத்தார். நவீன்குமாரை காப்பாற்றுவதற்காக பிரவீன்ராஜும் கிணற்றில் குதித்தார். நவீன்குமார் உடல் எடை அதிகமாக இருந்ததால், அவரை மேலே தூக்க முடியவில்லை. கிணற்றில் தத்தளித்த இருவரும் சிறிது நேரத்தில் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் அவிநாசி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீரில் மூழ்கி இறந்த இருவரது சடலமும் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர். பலியான 37 வயதான பிரவீன்ராஜ், எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். நண்பனை காப்பாற்ற சென்ற பிரவீன்ராஜும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆக 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை