ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை! அரசு அறிவிப்பு | ADMK | Palanisami
ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை! அரசு அறிவிப்பு | ADMK | Palanisami | Ambulance | DMK | Health Department ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை! அரசு அறிவிப்பு | ADMK | Palanisami | Ambulance | DMK | Health Department அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி வருகைக்காக, துறையூர் நகரப்பகுதியில், நேற்று ஏராளமானோர் திரண்டிருந்தனர். இரவு 7 மணியளவில் அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. ஏற்கனவே பிரசார கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த ஆம்புலன்சை அதிமுகவினர் வழி மறித்தனர். உள்ளே நோயாளி யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்தனர். டிரைவருடன் தகராறு செய்து தாக்க பாய்ந்தனர். விபத்து நடந்ததாக தகவல் வந்ததால் செல்வதாக, டிரைவர் சொன்னார். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிமுகவினரை விலக்கி வந்த வழியிலேயே ஆம்புலன்சை திருப்பி அனுப்பினர். இந்த சூழலில் இனி தனி நபரோ அல்லது கூட்டமாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்புலன்சில் ஏற்படும் சேதாரங்களுக்கான தொகையையும் கோர்ட்டில் செலுத்த நேரிடும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்து உள்ளது.