உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெரம்பலூர் அரசு ஆஸ்பிடலில் பெண் அனுபவித்த கொடுமை | Perambalur Government Hospital | Women

பெரம்பலூர் அரசு ஆஸ்பிடலில் பெண் அனுபவித்த கொடுமை | Perambalur Government Hospital | Women

பெரம்பலூர் அரசு ஆஸ்பிடலில் பெண் அனுபவித்த கொடுமை | Perambalur Government Hospital | Women கடலூர் மாவட்டம், தொழுதூரை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு தங்கையுடன் தகராறு ஏற்பட்டது. அக்டோபர் 25ம் தேதி மாலை அரளி விதை அரைத்து குடித்து உயிரை விட முயற்சி செய்தார். பெற்றோர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பிடலில் சேர்த்தனர். 4வது மாடியில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 28ம் தேதி அதிகாலை 4 மணி வரை தூங்காமல் இருந்ததாக தெரிகிறது. அப்போது ஆஸ்பிடல் ஊழியர் பெரியார் செல்வம் அங்கே வந்துள்ளார். சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் சென்று ஏன் தூங்கவில்லை என கேட்டுள்ளார். தூக்கம் வரவில்லை என பெண் பதில் சொன்னார். இதை கேட்ட அவர், கீழே என்னுடன் வந்தால் தூங்க மருந்து தருகிறேன் என்றாராம். அவரது பேச்சை நம்பி தரை தளத்தில் உள்ள கட்டு போடும் அறைக்கு சென்றார் அந்த பெண். அங்கே மருந்து தருவது போல நடித்த பெரியார் செல்வம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரை கீழே தள்ளிவிட்டு தாயிடம் ஓடிய பெண், நடந்த துயரத்தை சொல்லி அழுதுள்ளார். இதனை அறிந்து கோபப்பட்ட பெண்ணின் தாய் 28ம் தேதி இரவு பணிக்கு வந்த செல்வத்தை பிடித்து தாக்கியுள்ளார். தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த ஆஸ்பிடல் ஊழியர் பெரியார் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை