உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருச்செந்தூர் கட்டண தரிசன வரிசையில் முதியவரை குதறிய நாய் | Thiruchendur dog bite | Temple queue att

திருச்செந்தூர் கட்டண தரிசன வரிசையில் முதியவரை குதறிய நாய் | Thiruchendur dog bite | Temple queue att

திருச்செந்தூர் கட்டண தரிசன வரிசையில் முதியவரை குதறிய நாய் | Thiruchendur dog bite | Temple queue attack திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அடுத்த டாணா பகுதியை சேர்ந்த முத்துராமன், வயது 60. சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் திருச்செந்துார் முருகன் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றார். விஸ்வரூப தரிசனம் செய்வதற்காக, 100 ரூபாய் டிக்கெட் எடுத்து கட்டண வரிசையில் காத்திருந்தார். நீண்ட நேரமாக தரிசனம் செய்வதற்கு முத்துராமன் காத்திருந்ததால் ஆங்காங்கே கீழே அமர்ந்து சென்றுள்ளார். உட்பிரகாரத்தில் அவர் வரிசையில் சென்று கொண்டிருந்த போது, அங்கு படுத்திருந்த நாய் ஒன்று திடீரென முத்துராமனை காலில் கடித்துள்ளது. ரத்தம் கொட்டியதால் கோயில் பணியாளர்கள் அவரை மீட்டு, திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த 8 மணி நேரத்திற்குள் மீண்டும் தடுப்பூசி போட வேண்டும் என, டாக்டர்கள் கூறியனர். உடனடியாக அவர் அங்கிருந்து சொந்த ஊரான டாணாவிற்கு சென்றுள்ளார். அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பிடலில் மீண்டும் ஒரு ஊசி போடப்பட்டது. டாக்டர்கள் முத்துராமனை உள்நோயாளியாக அட்மிட் செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தமிழகம் முழுதும் ரேபிஸ் பிரச்னை இருந்து வரும் நிலையில், அவருக்கு கூடுதலாக சிகிச்சை அளிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தினர். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பிரகாரத்தில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

நவ 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை