/ தினமலர் டிவி
/ பொது
/ பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த இடங்களில் ரெய்டு | NIA Investigation | NIA Raid Chennai
பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த இடங்களில் ரெய்டு | NIA Investigation | NIA Raid Chennai
ராயப்பேட்டையில் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக மே மாதம் ரகசிய தகவல் வந்தது. ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான், நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் , அகமது அலி ஆகிய 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். யூட்யூபில் வீடியோ வெளியிட்டு ஹிஸ்புத் தஹீரிர் என்ற அமைப்புக்கு ஆள் சேர்த்த விவகாரம் தெரிய வந்ததால் 6 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பந்தட்ட நபர்கள் ஆள் சேர்ப்பு கூட்டம் நடத்திய தனியார் மண்டபத்தில் என்ஐஏ அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர்.
ஆக 17, 2024