விடிய விடிய 18 மணி நேரம் போராடிய மாணவர்கள் | NIT Trichy | Girl student abused by staff | Students
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. நேற்று மதியம் கல்லூரி மகளிர் விடுதியில் மின்சார இணைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய ஒப்பந்த பணியாளரான முதுகுளத்தூரை சேர்ந்த கதிரேசன் அங்கு சென்றுள்ளார். அப்போது விடுதி அறையில் தனியாக படித்துக்கொண்டிருந்த மாணவிக்கு கதிரேசன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியில் கூச்சலிட்டு வெளியே ஓடி வந்த மாணவி, சக மாணவ மாணவிகளிடம் நடந்ததை கூறியுள்ளார். பெற்றோருக்கும் தகவல் சொல்ல, அங்கு வந்த மாணவியின் தந்தை நேரு, திருவெறும்பூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கதிரேசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம், விடுதி வார்டனின் பொறுப்பின்மையை கண்டித்து கல்லூரி மாணவ மாணவிகள், விடுதி முன் திரண்டு விடிய விடிய போராட்டம் நடத்தினர்.