அரசு முத்திரையை அழித்து ஓட்டலுக்கு விற்றது அம்பலம் | hotel sealed | noon meal eggs | police crime |
ஓட்டலுக்கு சத்துணவு முட்டை சப்ளை 3 பெண்களை தூக்கிய போலீஸ் திருச்சியில் சத்துணவு முட்டைகளை ஓட்டல்களுக்கு விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்தவண்ணம் உள்ளன கடந்த வாரம் துறையூரில் ஒரு ஓட்டலில் சத்துணவு முட்டைகள் அரசு முத்திரையுன் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை ஒரு கஸ்டமர் வீடியோ எடுத்து நெட்டில் போட்டார். ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. குறைந்த விலைக்கு சத்துணவு முட்டைகளை விற்ற சத்துணவு அமைப்பாளர் வசந்தகுமாரி, ஓட்டல் ஓனர் ரத்னம் கைது செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு முட்டைகள் ஓட்டல்களுக்கு விற்கப்படுவதை தடுக்க தவறியதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், திருச்சியில் இன்னொரு ஓட்டலுக்கு சத்துணவு முட்டைகள் விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆயிஷா உணவகத்தில் முட்டைகளின் மீது கறுப்பு கறுப்பாக புள்ளிகள் இருப்பதை ஒரு கஸ்டமர் பார்த்தார். சில முட்டைகளின் மீது சிறுசிறு ஓட்டைகள் இருந்தன.