சம்பவம் நடந்தது எங்கே? யார் செய்த தவறு இது? | North indians | Cooking in Bathroom | Tiruppur
பாத்ரூமில் சமைத்து சாப்பிட்ட இளைஞர்களின் பரிதாப கதை திருப்பூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பீகாரைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள நஞ்சப்பா ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி கழிவறைகளையும் சுத்தம் செய்து வருகின்றனர். இந்த பீகார் இளைஞர்களை அரசு பள்ளி கழிப்பறையில் உள்ள அறையில் தங்க வைத்துள்ளனர். தற்போது இது வெட்ட வெளிச்சமாகியுள்ளது அந்த இளைஞர்கள் அங்கேயே சமைத்தும் சாப்பிட்டும் வந்தது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த சமூக ஆர்வலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது வைரலானது. இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக அவர்களை மாற்று இடத்தில் தங்க வைத்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், மாநகராட்சி நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்கின்றன..