/ தினமலர் டிவி
/ பொது
/ வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி | Northeast Monsoon | Low pressure area
வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி | Northeast Monsoon | Low pressure area
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நேற்று மாலை முதலே மழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவிலும் கனமழை நீடித்தது. இதனால், சாலைகள், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியதால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரின் அளவும் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது. இந்த சூழலில் வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தபடி வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.
அக் 14, 2024