/ தினமலர் டிவி
/ பொது
/ வாகனங்களை மறித்த மக்கள்: குத்தாலம் அருகே பரபரப்பு | ONGC | Leak in pipe | Gas leak | People protest
வாகனங்களை மறித்த மக்கள்: குத்தாலம் அருகே பரபரப்பு | ONGC | Leak in pipe | Gas leak | People protest
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரபாலபுரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எரிவாயு சேகரிப்பு மையம் மற்றும் எரிவாயு கிணறு அமைந்துள்ளது. அங்குள்ள காந்தி நகர் கீழகாலனி வயல்வெளி வழியாக செல்லும் ஓஎன்ஜிசி பைப் லைனில் நேற்று இரவு திடீரென லேசான கேஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் தீ விபத்து ஏற்படலாம் என்பதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். கேஸ் கசிவு பற்றி தகவல் கொடுத்தும் ஓஎன்ஜிசி நிர்வாகத்தினர் உடனடியாக சரி செய்ய வரவில்லை என கூறப்படுகிறது.
மே 31, 2025