உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கதை விடுகிறது பாக்: ஆபரேஷன் சிந்தூர் பற்றி IAF தளபதி சொன்ன தகவல் Operation Sindoor| IAF Chief Revea

கதை விடுகிறது பாக்: ஆபரேஷன் சிந்தூர் பற்றி IAF தளபதி சொன்ன தகவல் Operation Sindoor| IAF Chief Revea

93வது விமானப்படை தினத்தையொட்டி, விமானப்படையின் சாதனைகள் பற்றி விமானப்படை தளபதி அமர்ப்ரீத் சிங் கூறினார். ஆபரேஷன் சித்தூர் பற்றி பேசிய அவர், இந்த ஆண்டின் சிறந்த கூட்டு ராணுவ நடவடிக்கை என்றார். இந்த தாக்குதல் நமது விமானப்படையின் வலிமையை வெளிக்காட்டியது. பாகிஸ்தான் வான்வெளியில் நீண்டதூரம் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கான சான்றுகள் நம்மிடம் உள்ளன. பாகிஸ்தானுக்குள் சுமார் 300 கிலோ மீட்டர் புகுந்து பந்தாடியது நீண்டதூர தாக்குதலின் ஹைலைட். பாகிஸ்தானின் 8 முதல் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம். அதில் 4 முதல் 5 விமானங்கள் அமெரிக்காவின் F16 மற்றும் சீனாவின் JF17 ரக போர் விமானங்களாக இருக்கலாம். ஒரு கண்காணிப்பு விமானத்தையும் தூள் தூள் ஆக்கினோம். போர் விமானங்கள் தவிர, தரையில் உள்ள டார்கெட்டுகள் மீதும் துல்லிய தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது. 4 இடங்களில் ரேடார்கள், 2 இடங்களில் உள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், 2 ஓடுபாதைகள், ஏர்போர்ட்டில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடமான 3 ஹேங்கர்கள் hangers, தரையில் இருந்து ஏவுகணை ஏவும் அமைப்பும் அழிக்கப்பட்டன.

அக் 03, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rohan
அக் 04, 2025 20:49

இதற்கான ஆதாரங்கள் பல முறை செயற்கைகோள் படங்களுடன் வெளியிடப்பட்டு விட்டது.ரேடார் குறியீடுகள் என்பது நம்மை போன்று சாதாரண ஆட்களுக்கு புரியாது. இதுவெல்லாம் தெரியாமல் கேள்வி மட்டும் கேட்க வேண்டாம்


ஜெய்ஹிந்த்புரம்
அக் 04, 2025 11:47

தரவுகள் இன்றி ஒன்றிய மந்திரிகள் அரசியல் ஆதாயம் தேடலாம், விமானப்படை தளபதி நீங்கள் தரவுகளை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டுங்கள். முற்றிலும் டிஜிட்டல் வார்ஃபேர் என்று ஆகி விட்டது. ராடார் பதிவு, விமானிகளின் உரையாடல் பதிவு என்று ஒவ்வொரு கணமும் நவீன விமானப் போரில் பதிவாகின்றன. அவைகளை காட்ட என்ன தயக்கம்? அஅதை நான் கேட்கவில்லை, வெளியுலகம் அவைகள. இல்லாமல் உங்களின் வாய் சாகசத்தை நம்பமாட்டார்கள். அதனால் தான் பெருமை தர, தரவுகளுடன் மார் தட்டுங்கள்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை