உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாகிஸ்தான் பறக்கவிட்ட 2வது ஏவுகணை-பதற்றம் kashmir pahalgam attack | india vs pakistan fatah missile

பாகிஸ்தான் பறக்கவிட்ட 2வது ஏவுகணை-பதற்றம் kashmir pahalgam attack | india vs pakistan fatah missile

நாட்டையே உலுக்கிய காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ஆப்ரேஷனில் இந்தியா களம் இறங்கி இருக்கிறது. தாக்குதல் நடத்தும் விதம், இலக்கு, நேரம் குறித்து சுதந்திரமாக முடிவெடுத்துக்கொள்ள முப்படைக்கும் மோடி க்ரீன் சிக்னல் கொடுத்தார். அரபிக்கடலில் நம் போர் கப்பல்கள் அடுத்தடுத்து ஒத்திகை பார்த்தன. ஏவுகணை சோதனையும் நடத்தப்பட்டது. இனனொரு பக்கம் நம்மிடம் உள்ள சக்தி வாய்ந்த போர் விமானங்களும் போர் ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால் பாகிஸ்தானின் பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. ‛Exercise Indus என்ற போர் பயிற்சியின் ஒரு அங்கமாக நேற்று முன்தினம், அப்தாலி வெப்பன் சிஸ்டம் என்ற ஏவுகணையை சோதித்து இந்தியாவை சீண்டியது பாகிஸ்தான். அந்த ஏவுகணை தரையில் இருந்து பறந்து சென்று 450 கிலோ மீட்டர் தூரம் வரையிலான நிலப்பரப்பை தாக்கும் சக்தி கொண்டது. ஏற்கனவே பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் கொதிப்பில் இருக்கும் இந்தியாவை மேலும் ஆத்திரமூட்டும் வகையில் பாகிஸ்தானின் செயல் இருந்தது. இன்று மீண்டும் இன்னொரு ஏவுகணையை சோதனை செய்து பாகிஸ்தான் சேட்டையில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் இப்போது சோதித்த ஏவுகணைக்கு Fatah என்று பெயர். இதுவும் தரையில் இருந்து பறந்து சென்று தரைப்பகுதியில் உள்ள இலக்கை தாக்கும் தன்மை கொண்டது.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !