ஆப்கான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்த நேரத்தில் அதிர்ச்சி | Pakistan airstrikes Kabul |
பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் பாதுகாப்புப்படை, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது வழக்கம். இந்த அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் இறங்கி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகாணங்களில் தெஹ்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பிற்கு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்கள் ஆதரவு அளிப்பதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன் ஆப்கான் எல்லையில் பதுங்கி இருந்த இவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 19 பயங்கரவாதிகள், 11 பாதுகாப்புப்படை வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் இந்த தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார். பாகிஸ்தானை குறிவைக்கத் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டது என குறிப்பிட்டிருந்தார். அவர் சொல்லி ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தலிபான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் விமான படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்தது. நகரின் வான்வெளியில் போர் விமான சத்தம் கேட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தெஹ்ரீக்-இ-தாலிபான் தலைவர் நூர் வாலி மெஹ்சூத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது நூர் வாலி மெஹ்சுத் பாதுகாப்பாக இருக்கிறார். இருப்பினும் அவரது மகன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, எட்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேரத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியா உடனான உறவை ஆப்கானிஸ்தான் வலுப்படுத்தி வருவதை கண்டு அதிருப்தி அடைந்தே பாகிஸ்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #PakistanAirstrikes #KabulAttack #TTPChiefTargeted #NoorWaliMehsud #AfghanistanPakistanWar #CrossBorderStrike #TalibanConflict #KabulExplosions #SouthAsiaTensions #BreakingNews2025